கலாஷேத்ரா வழக்கு பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் பாலியல் தொல்லை அளித்ததாக ருக்மணி அருண்டேல் கல்லூரி முன்னாள் மாணவி புகார் அளித்தார். இது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் அந்த கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை ஹரி பத்மன் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்கியது. இதனால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜூன் 3ம் தேதி ஜாமீன் வழங்கி விட்டதாகவும் அதனால் இந்த மனுவை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் ஹரிபத்மன் தரப்பில் கோரப்பட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கி விட்டதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.

The post கலாஷேத்ரா வழக்கு பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: