தேர்தல் அதிகாரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி

புதுடெல்லி: இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனம் (ஐஐடிஇஎம்) கடந்த 2011ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஐஐடிஇஎம்.மில் மாணவர்கள் விடுதியை திறந்து வைத்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், “தேர்தல் தொடர்பான விண்ணப்பங்கள், தகவல்கள், வழிகாட்டுதல் நடைமுறைகள் அனைத்தும் வலுவான குறியீடுகளுடன் தரப்படுத்தப்பட்டுள்ளன. இவை செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு கலந்துரையாடல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் தேர்தல் அதிகாரிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் பயிற்சி அளிக்கும் ஒத்துழைப்பு விரிவாக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

The post தேர்தல் அதிகாரிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: