தனியார் நிறுவனங்கள் அரசு விரைவு பேருந்துகளில் விளம்பரம் செய்யலாம்: வருவாயை அதிகரிக்க திட்டம்

சென்னை: தனியார் நிறுவனங்கள் அரசு விரைவு பேருந்துகளில் விளம்பரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு பேருந்துகளில் வருவாயை அதிகரிக்கும் வகையில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை பேருந்துகளில் உபயோகித்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், சென்னையில் மாநகர பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூ. 1 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. அதேபோல, அரசு விரைவு பேருந்துகளில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை அனுமதிக்கும் பட்சத்தில் மாதந்தோறும் ரூ.30 லட்சத்திற்கும் மேல் வருவாய் அதிகரிக்கும். அதன்படி, 250 அரசு விரைவு பேருந்துகளில் பக்கவாட்டு கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்ய, தனியார் நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். அதற்கான ஒப்பந்தகளை விரைவில் செய்ய உள்ளோம்.

The post தனியார் நிறுவனங்கள் அரசு விரைவு பேருந்துகளில் விளம்பரம் செய்யலாம்: வருவாயை அதிகரிக்க திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: