அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் ரிசர்வேஷன் சேவை விரிவாக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: அரசு விரைவு பேருந்துகளில்இருக்கைகள் முன்பதிவு சேவை இன்று முதல் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பேருந்துகளில் தினமும் பயணம் மேற்கொள்ளும் 60 ஆயிரம் பயணிகளில், 20 ஆயிரம் பயணிகள் வரை முன்பதிவு செய்கின்றனர். அந்தவகையில், இருக்கை முன்பதிவு வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரம் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மதுரையிலிருந்து, கொடைக்கானல், கொல்லம், மூணாறு, நாகர்கோவில், சேலம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கும், கோயம்புத்தூரிலிருந்து, திருவண்ணாமலை, சேலத்திலிருந்து, பெங்களூரு, காஞ்சிபுரம், மதுரை, திருவாரூர். அதேபோல, ஈரோட்டிலிருந்து, பெங்களூரு, குமுளி, மைசூரு, புதுச்சேரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், ஓசூரிலிருந்து, சென்னை கடலூர், புதுச்சேரி, திருச்சி, மதுரை, ஊட்டியிலிருந்து, பெங்களூரு, கண்ணனூர், கோழிக்கோடு, மைசூர், பாலக்காடு, பழனியிலிருந்து, கடலூர், நெய்வேலி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி.

இதேபோல, சிவகாசியிலிருந்து, ஈரோடு, மேட்டுப்பாளையம், சேலம், திருப்பூர் மற்றும் திருநெல்வேலியிலிருந்து, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக, தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51,046 இருக்கைகளிலிருந்து, 61,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளுடன் கூடுதலாக 200 கி.மீ. தூரத்திற்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த முன்பதிவு வசதி இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எனவே, இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

The post அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் ரிசர்வேஷன் சேவை விரிவாக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: