தமிழ்நாடு வேளாண், மீன்வள துறை படிப்புக்கு 34,000 பேர் விண்ணப்பம்: நாளை மறுநாள் கடைசி

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக இளமறிவியல் படிப்புகளுக்கு தற்போது வரை 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என இரு பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது. மாணவர்கள் tnau.ucanapply.com மற்றும் tnagfi.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேளாண்மை பல்கலையில் 14 இளமறிவியல் படிப்புகள், 3 டிப்ளமோ படிப்புகள் இருக்கிறது. மீன்வளம் பல்கலைக்கழகத்தில் 6 இளமறிவியல் பாடங்கள், 3 தொழில் முறை பாடபிரிவுகள் இருக்கின்றது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் ரூ.250. மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற 24 மணி நேரமும் பல்கலை.யை தொடர்பு கொள்ளலாம். வேளாண் பல்கலை. உறுப்பு கல்லூரியில் 3,363 இடங்கள், இணைப்பு கல்லூரியில் 2,806 இடங்கள் என மொத்தம் 6,169 இடங்கள் இருக்கின்றது. மீன் வளம் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 345 இடங்கள் உள்ளது. 57 சிறப்பு இட ஒதுக்கீடு இடங்களும் நிரப்பப்படுகிறது. ஆன்லைன் மூலம் தற்போது வரை 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேளாண்மை ஆங்கில வழி, தமிழ்வழி, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு வேளாண், மீன்வள துறை படிப்புக்கு 34,000 பேர் விண்ணப்பம்: நாளை மறுநாள் கடைசி appeared first on Dinakaran.

Related Stories: