மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், நாளை (ஜூன் 7) முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; மெட்ரோ பயணிகளுக்கு 07.06.2023 முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 07.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது.

மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பொறுத்தவரை, கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ ரயிலில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. கட்டண தள்ளுபடியின் விவரங்களை மேலும் தெரிந்து கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள வாகன நிறுத்த கட்டண விவரங்கள் (https://chennaimetrorail.org/parking-tariff/), மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் (Banners) மற்றும் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தம் பணியாளர்களை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: