பளபளக்கும் பப்பாளி…

கோடைகாலத்தில் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும் பழங்களில் பப்பாளியும் ஒன்று. மிக அதிகமாக, சுலபமாகக் கிடைப்பதாலேயே இந்தப் பழத்தைப் பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை. ஆனால் அளப்பரிய பயன்கள் பல பப்பாளியில் உள்ளன. இதோ சில.

1. பப்பாளி மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடிபப்பாளி சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
2. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளி மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி நிவாரணம் தருகிறது.
3. முக அழகுக்கு: நன்கு பழுத்த பழத்தைக் கூழாகப் பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறலாம்.
4. வயோதிகத்தை கட்டுப்படுத்த: இளமைப் பொலிவைக்கூட்டி வயோதிகத்தை கட்டுப்படுத்தும் பப்பாளி. உடம்பிலுள்ளநச்சுக்கள் முழுவதையும் சுத்திகரிக்கக் கூடியது.உடல் தேகம் குறைய: பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டுவர குண்டான உடல் படிப்படியாக மெலிந்து விடும்.
5. உடல் எடை குறைக்க விரும்புவோர் அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் பெறலாம்.
6. உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு: உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள், ஒரு மாதம் தொடர்ந்து பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
7. எலும்புகள் வளர்ச்சிக்கு: எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளி பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கிவிடும்.
8. பப்பாளிப்பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்துவர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
– கவிதா பாலாஜிகணேஷ்

The post பளபளக்கும் பப்பாளி… appeared first on Dinakaran.

Related Stories: