கள்ளக்குறிச்சி அருகே நிலத் தகராறில் இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ வெளியீடு: போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர் பேட்டை அருகே நிலத் தகராறில் இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலந்தல் கிராமத்தில் வசிக்கும் நர்சார், ஜீவகன் ஆகிய இருவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. அந்த நிலத்தில் ஜீவகன் தரப்பினர் கம்பி வேலி அமைக்க முற்பட்ட நிலையில் அந்த வேலையை நர்சார் அவரது மனைவி ஜெயந்தி மகன் விஜய பிரதாபன் ஆகியோர் தடுத்து நிறுத்தி ஜீவகன் வீட்டின் முன்பாக வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜீவகன் மகன் குமார் என்பவர் வீட்டிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து விஜய் பிரதாபன் தலையை தாக்கினார் இதில் படுகாயமடைந்த விஜய பிரதாபன் மயங்கி விழுந்த நிலையில் அவரது பெற்றோர் மீதும் கட்டையை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தந்தை, தாய், மகன் ஆகிய மூவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரும்பு கம்பியால் அடிவாங்கிய விஜய பிரதாபனுக்கு தலையில் ஏழு தையல் போடப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பான விடியோவை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே நிலத் தகராறில் இளைஞரை இரும்பு கம்பியால் தாக்கும் வீடியோ வெளியீடு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: