வெள்ளியூர் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு சமுதாயக்கூடம் திறப்பு விழா: எம்எல்ஏக்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: வெள்ளியூர் ஊராட்சியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு சமுதாயக் கூட திறப்பு விழாவில் எம்எல்ஏக்கள் ஆவடி நாசர், கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர். திருவள்ளூர் ஒன்றியம், வெள்ளியூர் ஊராட்சியில் பூந்தமல்லி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்டுப்பட்ட சமுதாயகூடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிக்குழு துணைத் தலைவர் பர்கத்துல்லா கான், மாவட்ட கவுன்சிலர் தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வெங்கடேசன், ஊராட்சி துணைத் தலைவர் முரளிகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் வேலு ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இந்த விழாவில் மத்திய மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், வசதி படைத்தவர்கள் பெரிய பெரிய திருமண மண்டபங்கள், ஏசி ஹால் போன்ற இடங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வது உண்டு. ஆனால் ஏழை, எளிய கிராம மக்கள் வீட்டின் அருகில், தெருவில் பந்தல் அமைத்து சுப நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். சாதாரண மக்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு இதுபோன்ற சமுதாயக்கூடங்களை கட்டி வருகிறது.

எனவே இதற்காக ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏவின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடத்தில், வெள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைத்து சுப நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொள்ளலாம் என்றார். இதில் திமுக தலைமை செயற்கு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் விமல்வர்ஷன், சங்கீதா சீனிவாசன், கொடுவேலி குமார், ஒன்றிய நிர்வாகிகள் மனோகரன், மதுரை வீரன், விமலாகுமார், பிராங்கிளின், வேலாயுதம், ஈக்காடு முகமது ரபி, கபிலன், தசரத நாயுடு, ஊராட்சி தலைவர் பப்பி முனுசாமி, மூர்த்தி, கன்னியப்பன், ரவி, கெஜா, யுவராணி, அஜித்குமார், ஜெயம்மாள், ஏழுமலை, நாகராஜ், சதீஷ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வெள்ளியூர் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு சமுதாயக்கூடம் திறப்பு விழா: எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: