அஜியோ பிக் போல்ட் சேல்

சென்னை: இந்தியாவின் முன்னணி பேஷன் இ-டெயிலரான அஜியோ, மெலோரா நிறுவனத்துடன் இணைந்து அடிடாஸ் இயக்கும் தனது தலைசிறந்த ‘பிக் போல்ட் சேல்’ நிகழ்வை, ஜூன் 1ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த பிரமாண்டமான நிகழ்வில் 5000க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் வழங்கும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான ஒழுங்கமைக்கப்பட்ட நவநாகரீக பொருட்களில் இருந்து தேர்வு செய்து ஈடு, இணையற்ற ஷாப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த அறிவிப்பு குறித்து அஜியோ தலைமை செயல் அதிகாரி வினீத் நாயர் கூறுகையில், ‘‘இந்த நிகழ்வில் நம்பமுடியாத மற்றும் தவிர்க்க முடியாத சலுகைகள் மற்றும் இன்னும் பல அற்புதமான வழங்கல்களை தினமும் சூப்பர் ஹவர்ஸ், நேரத்தின் போது தவறாது பெறலாம். அதிகளவு ஷாப்பிங் செய்பவர்கள் BBS விற்பனையின் போது ஒவ்வொரு 6 மணிநேர இடைவெளியிலும், அதிகளவு பொருட்களை வாங்கி முன்னிலை வகிக்கும் வாடிக்கையாளர்கள், ஐபோன் 14 ப்ரோ, ஆப்பிள் மேக்புக் ஏர், இந்திய ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் சாம்சங் S23 போன்ற அற்புதமான பரிசுகளை வெல்லலாம்.

அதிகளவில் பொருட்கள் வாங்கி முதல் 3 இடத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெல்லலாம். ரூ.4,999 அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்கி ரூ.9,999 வரை மதிப்பிலான பரிசுகளை உத்திரவாதமாகப் பெறலாம். அனைத்து ப்ரீபெய்ட் பணப் பரிவர்த்தனைகளுக்கும் 10% வரை கூடுதல் தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் பெறலாம். ஒவ்வொரு முறை ஷாப்பிங் செய்யும் போதும் வாடிக்கையாளர்கள் அஜியோ புள்ளிகள் மற்றும் RelianceOne புள்ளிகளை பெறலாம். அஜியோ புள்ளிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் 5% கூடுதல் தள்ளுபடியை பெறலாம்,’’ என்றார்.

The post அஜியோ பிக் போல்ட் சேல் appeared first on Dinakaran.

Related Stories: