ஒடிசா ரயில் கோர விபத்து எதிரொலி சென்னை டூ புவனேஸ்வருக்கு தாறுமாறாக எகிறிய விமான கட்டணம்: 20 மடங்கு வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி

சென்னை: ஒடிசா ரயில் கோர விபத்து எதிரொலியாக சென்னை டூ புவனேஸ்வருக்கு தாறுமாறாக விமான கட்டணம் உயர்த்தப்பட்டது. 20 மடங்கு வரை கட்டணத்தை உயர்த்தியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒடிசா மாநிலத்தில் கடந்த 2ம் தேதி நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒடிசாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சாலை வழியாக சென்றால் பல மணிநேரம் ஆகும் என்பதால், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை கவனிக்கவும் பெரும்பாலானவர்கள் விமான சேவையை பயன்படுத்த தொடங்கினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சென்னையில் இருந்து புவனேஷ்வர் வழித்தடத்தில் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்தப்பட்டது. அதாவது, சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு செல்லும் விமான டிக்கெட்டின் விலை 20 மடங்கு வரை உயர்ந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது சாதாரணமான நாட்களில் விமான டிக்கெட் விலை 4 ஆயிரம் தான். ரயில் விபத்தை தொடர்ந்து விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணமாக ரூ.55,602, ரூ.59,577, ரூ.59,592, ரூ.80,298 என்று தாறுமாறாக உயர்த்தின. இந்த பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதால் விபத்தில் சிக்கியவர்கள், அவர்களின் குடும்பத்தினர் புவனேஸ்வரத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு பஸ்சில் சென்று அங்கிருந்து வேறு பஸ்கள் மூலம் தமிழகத்திற்கு புறப்பட்டு வந்தாக பயணிகள் குமுறினர். கோர விபத்து சம்பவத்தில் இது போன்று கட்டணத்தை உயர்த்தியதற்கு பொதுமக்களிடம் கடும் கண்டணங்கள் எழுந்துள்ளன. இது போன்ற நாட்களில் கட்டண கொள்ளையை அனுமதிக்கக்கூடாது. இது போன்று கட்டணம் வசூலித்த விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

The post ஒடிசா ரயில் கோர விபத்து எதிரொலி சென்னை டூ புவனேஸ்வருக்கு தாறுமாறாக எகிறிய விமான கட்டணம்: 20 மடங்கு வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: