அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு

திருவள்ளூர்: 2023ம் கல்வியாண்டில் திருவள்ளுர் மாவட்டத்திற்குற்பட்ட அம்பத்தூர் (மகளிர்) மற்றும் வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கான சேர்க்கை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக கடந்த 24ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன. வருகிற 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அல்லது ஏதேனும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு, தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.50ஐ செலுத்த வேண்டும். பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு அரசால் விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகம், மிதிவண்டி, சீருடை மற்றும் காலணியுடன் சேர்த்து மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 வழங்கப்படும் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: