கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் சாதனை: முதல்வர் பாராட்டு

சென்னை: நார்வேயில் நடந்த செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக டிரா செய்த இந்திய கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் சாதனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: நார்வே செஸ் போட்டியில் கார்ல்சனுக்கு எதிராக அசத்தலான, தீவிரமான, கடின போராட்டத்தின் மூலமாக டிரா செய்து, உங்கள் செஸ் பயணத்திலேயே மிக அதிகமாக 2739 தரப் புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ள கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ்க்கு பாராட்டுகள். மேலும் பல உயர்நிலைகளை அடைந்து, இந்தியாவின் சதுரங்க தலைநகரான சென்னைக்கு தொடர்ந்து பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். கார்ல்சனுக்கு எதிராக 82 நகர்த்துதல்களில் டிரா செய்ததன் மூலமாக குகேஷ் (17 வயது), தனது அதிகபட்சமான 2739 ‘லைவ் ரேட்டிங் பெற்று அசத்தினார். உலக தரவரிசையில் குகேஷ் தொடர்ந்து 15வது இடத்தில் நீடிக்கிறார்.

The post கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் சாதனை: முதல்வர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: