காட்டுப்பள்ளி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அலையாத்தி காடு வளர்ப்பு திட்டம்: அமைச்சர்கள் மரக்கன்றுகளை நட்டனர்

பொன்னேரி: காட்டுப்பள்ளி ஊராட்சியில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அலையாத்தி காடு வளர்ப்புத் திட்டத்தை அமைச்சர்கள் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.
திருவள்ளூர் மாவ ட்டம் மீஞ்சூர் ஒன்றியம், காட்டுப்பள்ளி ஊராட்சியில் அடங்கிய புழுதிவாக்கம் கிராமத்தில் மிஷ்டி இயக்கம் சார்பில், சதுப்பு நிலப்பகுதி மற்றும் உவர் மண் கொண்ட பகுதிகளில், அலையாத்தி காடுகளை உருவாக்க, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அலையாத்தி காடுகள் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டது. நேற்று மாலை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் புழுதிவாக்கம் பகுதியில் அலையாத்தி செடிகளை நட்டு வைத்து, இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் பொன்னேரி துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ சிஏச்.சேகர், மாவட்ட ஊராட்சிக்கு தலைவர் உமா மகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் சந்திரசேகர், குமார், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வள்ளூர் ரமேஷ், ராஜ், மீஞ்சூர் மின்வாரிய அதிகாரி பாண்டியன் மற்றும் சுற்றுச்சூழல் துறை, வனத்துறை தலைமை அதிகாரிகள் திமுக, காங்கிரஸ் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காட்டுப்பள்ளி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அலையாத்தி காடு வளர்ப்பு திட்டம்: அமைச்சர்கள் மரக்கன்றுகளை நட்டனர் appeared first on Dinakaran.

Related Stories: