மதுராந்தகம்: கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைப்பெற்றது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய இளைஞர் அணி திமுக மற்றும் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி இணைந்து, கலைஞரின் 100வது பிறந்தநாள் விழாவையொட்டி, மருத்துவ முகாமை சிறுநல்லூர் ஊராட்சி முதுகரை கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜி.டி.எம்.சிகாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக துணைத் தலைவர் மீனாட்சி வரவேற்றார்.
ஒன்றிய செயலாளர் பொன்.சிவகுமார் கலந்துகொண்டு மருத்துவமுகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண், மூக்கு, காது, இதயம் ஆகியவற்றை பரிசோதனை செய்து கொண்டனர். இரும்மல், சளி, காய்ச்சல், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகளை பெற்று சென்றனர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பிரவீன் குமார், சவிதா, திமுக ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், சுமித்ரா தேவி, சக்கரபாணி, குமார், பத்மா செல்வராஜ், தனபால், உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சிறுநல்லூர் ஊராட்சியில் கருணாநிதி 100வது பிறந்தநாள் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.