கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

திருப்போரூர்: கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா, திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றிய குழுத்தலைவர் எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். முன்னதாக புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ம.ஆறுமுகம் வரவேற்றார்.

ஒன்றிய துணை செயலாளர்கள் எல்.ஜெயபால், ஏ.ரமேஷ், ராஜாராம், ஒன்றிய பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட பிரிதிநிதிகள் ஏ.கருணகரன், மு.மயில்வாகனன், என்.ஜி.கெஜராஜன், எ.வாசுதேவன் டி.பாலசுப்பிரமணியன், கிளை கழக செயலாளர்கள் த.தாமோதரன் பி.ஜி.எஸ்.ஆறுமுகம், ஆ.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு அரசு கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, மாற்றுத்திறனாளிகளுக்கு நாற்காலி மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு, வேட்டி – சேலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புசெழியன், தலைமை பொதுகுழு உறுப்பினர் சதீஷ், திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் மு.தேவராஜ், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கோவிந்தன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் முனுசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், புதுப்பாக்கம் கழக முன்னோடிகள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள், புதுப்பாக்கம் ஊராட்சி கிளை கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் க.கவுரிசங்கர் நன்றி கூறினார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: