ஒப்பந்த செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சாத்தியம் இல்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஒப்பந்த செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சாத்தியம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒப்பந்த செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ரூ.18,000 ஊதியம் வழங்கப்படுகிறது. வரும் ஆண்டுகளில் ஏற்படும் 1,283 காலிப் பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்படுவர் என்று அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.

The post ஒப்பந்த செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சாத்தியம் இல்லை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: