புதுப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் நேற்றிரவு கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று சிறப்புரையாற்றி, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்பட 300க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் நேற்றிரவு கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் மற்றும் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். புதுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ம.ஆறுமுகம் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர்கள் எல்.ஜெயபால், ஏ.ரமேஷ், ராஜாராம், ஒன்றிய பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் ஏ.கருணாகரன், மு.மயில்வாகனன், என்.ஜி.கெஜராஜன், ஏ.வாசுதேவன் டி.பாலசுப்பிரமணியன், கிளை செயலாளர்கள் த.தாமோதரன், பி.ஜி.எஸ்.ஆறுமுகம், ஆ.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் உள்பட 300க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புசெழியன், தலைமை பொதுகுழு உறுப்பினர் சதீஷ், திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் மு.தேவராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் கோவிந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் முனுசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் க.கௌரிசங்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புதுப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: