வண்டலூர் பூங்கா வளாகத்தில் ஓட்டேரி ஏரியின் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளை தொடக்கி வைத்தார் அமைச்சர் மா.மதிவேந்தன்

சென்னை: இன்று செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வளாகத்தில் ஓட்டேரி ஏரியின் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளை வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தொடங்கி வைத்து தமிழ்நாடு ஈரநிலம் இயக்கம் தகவல் கையேடு வெளியிட்டார்.

அருகில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் துறைத் தலைவர் சுப்ரத் மஹாபத்ர, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் சீனிவாஸ் ர ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் உறுப்பினர் செயலர் தீபக் ஸ்ரீவஸ்தவா, செங்கல்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி துர்கேஷ், ஆகியோர் உள்ளனர்.

The post வண்டலூர் பூங்கா வளாகத்தில் ஓட்டேரி ஏரியின் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளை தொடக்கி வைத்தார் அமைச்சர் மா.மதிவேந்தன் appeared first on Dinakaran.

Related Stories: