சென்னையில் யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை கைது செய்தது வருவாய் புலனாய்வு துறை: 4 கிலோ யானை தந்தங்களை பறிமுதல்

சென்னை: சென்னையில் 4 கிலோ யானை தந்தங்களை பறிமுதல் செய்து வருவாய் புலனாய்வு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். பறிமுதல் செய்த யானை தந்தங்களின் மதிப்பு 7 கோடியே 19 லட்சம் ரூபாய் என்று தெரிவித்துள்ளனர்.

உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோதப் பொருள்களில் போதைப்பொருள் முதலிடத்தில் இருக்கிறது. ஆயுதக் கடத்தல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருப்பவை யானைத் தந்தங்கள். கடத்தல்காரர்களைப் பொறுத்தவரை, யானைத் தந்தம் என்கிற பெயரே ஒரு போதைப் பொருள்தான். இதற்காக ஆண்டுக்கு 25,000 முதல் 50,000 யானைகள் கொல்லப்படுகின்றன. உலகம் முழுவதும் வன உயிரினங்கள் தொடர்பான சட்ட விரோதமான வர்த்தகம் சுமார் 19 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெறுகின்றன.

யானை பெயரில் மட்டும் பிரமாண்டம் இல்லை. அதை அடிப்படையாக வைத்து உலகில் நடக்கும் கடத்தலும் வியாபாரமும் கூட மிகப்பெரியவைதான். உணவுக்காக மட்டுமே ஓர் உயிரினம் மற்றொரு உயிரினத்தைக் கொல்லும். ஆனால், மனித இனம் மட்டுமே, பணத்துக்காகவும் மற்ற உயிரினங்களைக் கொல்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது யானைகள் தான். தந்தங்கள், தோல், பற்கள், ரோமம், நகங்கள் எனப் பல காரணங்களுக்காக வேட்டையாடப்படும் யானைகளைக் காக்கப் பலரும் போராடி வருகிறார்கள்

இந்நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 2023 இன் பிரிவு 50-ன் கீழ் சுங்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட புதிய பொறுப்பின் கீழ், சட்டவிரோத உள்நாட்டு வனவிலங்கு வர்த்தகத்தை முறியடிக்கும் வகையில் இன்று சென்னையில் 4.03 கிலோ யானை தந்தங்களை DRI கைப்பற்றியது மற்றும் 7 பேரை வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

The post சென்னையில் யானை தந்தங்களை விற்க முயன்ற 7 பேரை கைது செய்தது வருவாய் புலனாய்வு துறை: 4 கிலோ யானை தந்தங்களை பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: