சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் கனமழை: தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கும் மேலாக வெப்பநிலை பதிவானது. குறிப்பாக கடந்த 3ம் தேதி மீனம்பாக்கத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது. அதேபோல நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட்கும் மேலாக வெப்பம் பதிவாகியிருந்தது.

கடந்த 5 நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று மேற்குத்திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பொழிந்து வருகிறது. 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வண்டலூர், பெருங்களத்தூர், மண்ணிவாக்கம், முடிச்சூர், கூடுவாஞ்சேரி, தைலாவரம், காயாரம்பேடு, கன்னிவாக்கம், பாண்டூர், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கோடம்பாக்கம் மழை பெய்து வருகிறது.

சென்னை மட்டுமல்லாமல் நீலகிரி, ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் கனமழை: தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: