கசப்பின் இனிமை!

நன்றி குங்குமம் டாக்டர்

கசப்புச் சுவையை நாம் பெரும்பாலும் விரும்புவதில்லை. கசப்புச் சுவை நம் உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. கசப்புச் சுவை நரம்புகளுக்கு நல்ல பலத்தை ஊட்டும். உடம்பு திண்ணென்று இருக்கும். எப்பொழுதும் வலிமையோடு இருக்கச் செய்யும். சுண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கறிவேப்பிலை ஆகிய எல்லாமே கசப்புச் சுவை அடங்கியவைதான்.

தேன் இனிப்பாக இருந்தாலும் அதிலும் கசப்புச் சுவை அடங்கியுள்ளது. இவைகளை நாம் ஒதுக்கிவிடாமல் உணவில் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வர வேண்டும். கசப்புச் சுவையானது நரம்புகளுக்கு நல்ல பலத்தை ஊட்டும். மேலும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கும் சத்து கசப்புக்கு உள்ளது. இது உடலில் இன்சுலினை செயல்படுத்துகிறது, இதன் காரணமாக உடலில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை கொழுப்பு வடிவத்தை குறைக்கிறது. அதை நேரடியாக சாப்பிட்டாலும் அல்லது சாறு வடிவில் குடித்தாலும், அது உடலுக்கு பெரிய நன்மைகளைத் தரும்.
அதுபோன்று, கசப்பான உணவு பொருட்கள் குடலில் இருக்கும் பீட்டா கரோட்டினுடன் வேலை செய்கிறது, இது கண்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

எனவே, பாகற்காய் போன்ற கசப்பு சுவையுடைய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது புற்றுநோய் பாதிப்பு ஏற்படாது. புற்றுநோய் கட்டி இருந்தாலும் அதைக் கரைத்துவிடும்.

கசப்பு சுவைகொண்ட சாறு தயாரிக்கும்முறை

பப்பாளி இலையும் கசப்புச் சுவை உடையது தான். எனவே, சிறிதளவு பப்பாளி இலைகளை எடுத்து சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, கொதி வந்ததும் இறக்கி ஆற வைத்துக் குடித்து வர, புற்றுநோய் வரவே வராது. பாகற்காயைச் சிறியதாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, காய்ச்சவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் அந்த நீரைக் குடித்து வர, சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மேலும், கணினி திரைக்கு முன்பு அமர்ந்து வேலைபார்க்கும் நபர்கள் வாரம் இரண்டு முறை இந்த சாறை குடித்து வருவது நன்மை பயக்கும்.

தொகுப்பு : எஸ். இராமதாஸ்

The post கசப்பின் இனிமை! appeared first on Dinakaran.

Related Stories: