10 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டி தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும்: பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

சென்னை: 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டி தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும் என்று பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். 2012 ம் ஆண்டு தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பணி நியமனத்துக்கான ஆசிரியர்களுக்கு தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும் பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தாள் -2 ல் , 15 ஆயிரத்து 297 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் . அதைத் தொடர்ந்து தாள் -1 ல் , 1 லட்சத்து 53 ஆயிரத்து 533 பேர் பங்கேற்றனர் . அதில் 21 ஆயிரத்து 543 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு முதல் முதலாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 1 லட்சம் பேர் ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர்.

அவர்களின் பணி நியமனத்துக்குரிய போட்டித் தேர்வுகள் நடத்த அரசாணை ( எண் 149 ) பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது. இந்த போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு மே மாதத்துக்குள் வெளியிடப்படும். அதற்கு பிறகு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார்.

ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வில் கூறிய பாடத்திட்டங்கள் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித் தனியாக வெளியிடப்படும். இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 10 ஆயிரம் காலி இடங்கள் உள்ளன. இது தவிர , வட்டாரக் கல்வி அலுவலர் , கல்லூரி உதவிப் பேராசிரியர் , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பும் மே மாதம் வெளியிடப்படும் . இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்தார்.

 

The post 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனத்துக்கான போட்டி தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகும்: பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: