ரயில் விபத்தில் சிக்கிய ஜார்க்கண்ட் தொழிலாளிக்கு அண்ணாமலை போனில் ஆறுதல்

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய ஜார்க்கண்ட் தொழிலாளிக்கு பாஜ தலைவர் அண்ணாமலை போனில் ஆறுதல் கூறினார். மேலும் தமிழகத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். பாலசோரில் முகாமிட்டுள்ள பாஜ குழுவினர் கூறியதாவது: ஜார்க்கண்ட் மாநிலம் பரசோரா பகுதியை சேர்ந்தவர் குராபா (24). இவருக்கு திருமணமாகி ஒரு கை குழந்தையும் உள்ளது.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் முதல் முறையாக வேலைக்காக சென்னை புறப்பட்டு உள்ளார். விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது. அவரிடம் மாநில தலைவர் அண்ணாமலை போனில் பேசி ஆறுதல் கூறினார். குணமாகி சென்னைக்கு திரும்பி வரும்படியும் வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் உறுதி அளித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post ரயில் விபத்தில் சிக்கிய ஜார்க்கண்ட் தொழிலாளிக்கு அண்ணாமலை போனில் ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: