கவரப்பேட்டையில் திமுக சார்பில் ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை பகுதியில், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் ஏற்பாட்டில், நேற்று கலைஞர் 100வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கேவிஜி.உமாமகேஸ்வரி, தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி, திருமலை, கணேசன், புலியூர் புருஷோத்தமன், பிரபு, வெங்கடேசன், சுரேஷ், அவைத்தலைவர் ஜோதிலிங்கம், மாவட்ட கவுன்சிலர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கவரப்பேட்டை பஜாரில் கட்சிக்கொடி ஏற்றி, கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளும் கலைஞரின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஒடிசா மாநில ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், ஒன்றிய கவுன்சிலர் ஜோதி அமலா சரவணன், அரிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி பஜாரில் பேரூர் செயலாளர் அறிவழகன் ஏற்பாட்டில், திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு பேரூர் செயலாளர் அறிவழகன் மோர் வழங்கினார். அங்கு கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்துக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

மேலும், ரெட்டம்பேடு சாலை பகுதியில் பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் சி.கருணாகரன் ஏற்பாட்டில், கலைஞரின் திருவுருவப் படத்துக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதேபோல் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன் ஏற்பாட்டில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

The post கவரப்பேட்டையில் திமுக சார்பில் ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி appeared first on Dinakaran.

Related Stories: