ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!

சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் 100-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இது 100-வது பிறந்தநாள் என்பதால் தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக அரசு சார்பிலும் சிறப்பாக கொண்டாட ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது. இதனையொட்டி வடசென்னை, புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து காரணமாக பொதுக்கூட்டம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டம் வரும் 7ம் தேதி நடைபெறவுள்ளது. கலைஞரின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

The post ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: