ஒரே நாளில் சவரனுக்கு ரூ.464 குறைந்தது தங்கம்

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.464 குறைந்தது. தமிழகத்தில் மார்ச் மாதம் 5ம் தேதி ஒரு சவரன் ரூ.46,200க்கு விற்பனையானது. தமிழக தங்கம் விலை வரலாற்றில் இது அதிகப்பட்சமாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.5,620க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,960க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று முன்தினம் தங்கம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் ஒரு கிராம் ரூ.5,638க்கும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,104க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென குறைந்தது. அதாவது, ஒரு கிராம் ரூ.5,580க்கும், சவரனுக்கு ரூ.464 குறைந்து ஒரு சவரன் ரூ.44,640க்கும் விற்க்கப்பட்டது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை(திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் குறித்த தகவல் வெளியாகும்.

The post ஒரே நாளில் சவரனுக்கு ரூ.464 குறைந்தது தங்கம் appeared first on Dinakaran.

Related Stories: