முதல்வரின் நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன.. முதல்வருக்கு எமது பாராட்டுகள் :திருமாவளவன்

சென்னை : முதல்வரின் நடவடிக்கைகள் ஆறுதல் அளிப்பதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசாவில் நடந்த கோர இரயில் விபத்து நெஞ்சை உறைய வைக்கிறது. நூற்றுக் கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடுமெனத் தெரியவருகிறது. இது இந்திய வரலாற்றில் விவரிக்க இயலாத பெருந்துயரமாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுவதாக இருந்த கலைஞரின் நூற்றாண்டு விழாவுக்கான அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள். அத்துடன், மீட்புப் பணிகளில் ஒடிசா அரசுடன் இணைந்து செயல்படுகிறார். தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். இன்றைய நாளை துக்கநாளாகக் கடைபிடிக்கவும் ஆணையிட்டுள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன. மாண்புமிகு முதல்வருக்கு எமது பாராட்டுகள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post முதல்வரின் நடவடிக்கைகள் ஆறுதல் அளிக்கின்றன.. முதல்வருக்கு எமது பாராட்டுகள் :திருமாவளவன் appeared first on Dinakaran.

Related Stories: