ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு வெள்ளி காசு கொடுத்த போலீஸ்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெண்கள் ஹெல்மெட் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்றுமுன்தினம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டிவந்த பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அச்சத்துடன் நிறுத்திய பெண்களுக்கு, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்ததற்காக வெள்ளி நாணயத்தை பரிசாக அளித்து வாழ்த்துகள் எனக்கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

The post ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு வெள்ளி காசு கொடுத்த போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: