கிருஷ்ணகிரி அருகே போலீசார் விரட்டிச் சென்ற லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நெடுசாலை கிராமத்தில் அதிவேகமாக வந்த கிரானைட் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் விவசாயி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று மதியம் குருபரப்பள்ளியில் இருந்து நெடுசாலை வழியாக கிரானைட் ஏற்றி செல்லக்கூடிய லாரி வந்துள்ளது. இந்த லாரியின் பின்னே குருபரப்பள்ளி காவல்நிலையத்திற்குட்பட்ட போலீசார் லாரியை பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கு அச்சப்பட்டு லாரி ஓட்டுநர் அதிவேகமாக லாரியை ஓட்டி வந்தபோது நெடுசாலை அருகே சிவாஜிராவ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் நெடுசாலையில் இருந்து குருபரப்பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த லாரி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின்மீது மோதியதில் சிவாஜிராவ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் கூடிய மக்கள் போலீசாரை கண்டித்தும், லாரி ஓட்டுனரை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் லாரியின் கண்ணடியை உடைத்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

The post கிருஷ்ணகிரி அருகே போலீசார் விரட்டிச் சென்ற லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: