மீன்வள பல்கலை.,யில் டெக்னிக்கல் பணிகள்

நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்

1. Animal Husbandry Specialist: 1 இடம் (எஸ்சி- அருந்ததியர்). சம்பளம்: ரூ.56,100-1,77,500. தகுதி: Veterinary Science/Animal Science ல் முதுகலைப் பட்டம் தேர்ச்சி. மேலும் நெட் தேர்ச்சி/பி.எச்டி தேர்ச்சி/கணினி அறிவுத் திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. Stenographer Grade III: 1 இடம் (GT). சம்பளம்: ரூ.19,500-62,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம்/இந்தி/தமிழில் 10 நிமிடங்களில் சுருக்கெழுத்தில் எழுதி, 50 நிமிடங்களில் டிரான்ஸ்கிரிப் செய்து கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
3. Skilled Support Staff (KVK): 2 இடங்கள் (பொது-1, எஸ்சி அருந்ததியர்-1). சம்பளம்: ரூ.18,200-57,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சி.
கட்டணம்: பொது/ஒபிசியினருக்கு ₹1000/-. எஸ்சி/எஸ்டியினருக்கு ₹500/-மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tnjfu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.06.2023.

The post மீன்வள பல்கலை.,யில் டெக்னிக்கல் பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: