தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து..!!

சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று தனது 63ம் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் வாழ்த்து பதிவில், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான சகோதரி தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு எனது அன்புமிகு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி: புதுவை கவர்னர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதில், பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும், தேசிய விழுமியங்களுக்கும் அர்ப்பணித்துக் கொள்வதை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு சிறப்பான சந்தர்ப்பம். இந்த விழுமியங்களை ஒன்றுபடுத்த சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை சமாளித்து நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

கவர்னராக உங்களது அரசியல் சாசனக் கடமைகளை ஆற்றும் செயல்திறனும், கடமை உணர்வும், மாநிலத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச்செல்லும். சமுதாயத்திற்கும், மாநிலத்திற்கும், தேசத்திற்கும் நீங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்போடு சேவை செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளை வழங்கவும், தேச சேவையில் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 உள்துறை அமைச்சர் அமித்ஷா: தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் தமிழிசையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் இருந்து பெற்ற பிறந்தநாள் வாழ்த்துகளை பெறும் பாக்கியமாக கருதி அவர்களின் ஆசியும், வாழ்த்துகளும் என்னை தொடர்ந்து மக்கள் பணியாற்ற புத்துணர்ச்சியையும், புதுவேகத்தையும் அளிப்பதாகவும், தங்களின் வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், இன்று 63ம் பிறந்தநாள் காணும் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் சகோதரி தமிழிசை சவுந்தரராஜனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பொதுப்பணியாற்ற வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Related Stories: