சென்னையில் 108ºF வெப்பம் பதிவாக வாய்ப்பு : தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!!

சென்னை : சென்னையில் 108ºF வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தமிழகத்தில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. ஆங்காங்கே ஒருசில இடங்களில் அவ்வபோது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. குறிப்பாக சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் -105.8 பாரன்ஹீட்டும், திருத்தணி-105.08 பாரன்ஹீட்டும் , நுங்கம்பாக்கம்- 104.18 பாரன்ஹீட்டும், வேலூா்-104.18பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கத்தரி வெயில் முடிந்தபோதிலும் சென்னையில் இன்று அதிகபட்சமாக 108 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சென்னையில் நேற்று மீனம்பாக்கத்தில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், இன்றும் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது எனவும் கூறினார்.

The post சென்னையில் 108ºF வெப்பம் பதிவாக வாய்ப்பு : தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: