ஓய்வு பெறும் நாளில் நகராட்சி ஆணையருக்கு தமிழக அரசு பணி இடம் நீக்கம்: நகராட்சி பணியாளர்கள் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்துகளை திருச்சியில் உள்ள மல்டி பர்போஸ் இன்போசென்ஸ் சொசைட்டி மூலம் வாங்குவது வழக்கம் கடந்த 19ம் தேதி புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு தேவையான 335 லிட்டர் கொசு மருந்துகளை திருச்சியில் உள்ள நிறுவனத்திடம் இருந்து வாங்கியதாகவும் அதற்கு 3 லட்சத்து 98 ஆயிரத்து 299 ரூபாய் காசோலையாக செலுத்தப்பட்டதாகவும் நகராட்சி பதிவேற்றதில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் நகராட்சி தலைவர் ஜனாதனன், துணை தலைவர் பி.ஏ. சிதம்பரம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட கொசு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது கொசு மருந்துகள் எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது சரிவர அளிக்காததால் நகர் மன்ற தலைவர் ஜனாதனன் காவல்துறைக்கு இணையதளத்தில் புகார் அளித்தார்.

மேலும் நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதே சமயம் நேற்று முன்தினம் நகராட்சி ஆணையர் சையது உசேன் பணி ஓய்வு பெரும் நிலையில், நகராட்சி அலுவலகத்தில் கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 31ம் தேதி மாலை மாலை 6 மணி அளவில் கொசு மருந்தை ஒரு வேனில் அவசரமாக கொண்டு வந்து இறக்கி வைத்தனர். இதுகுறித்து நகர மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் நகராட்சி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சையது உசேன் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோரை பணியிடம் நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஓய்வு பெரும் நாளில் நகராட்சி ஆணையர் சையது உசேன் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டதால் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பணியாளர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post ஓய்வு பெறும் நாளில் நகராட்சி ஆணையருக்கு தமிழக அரசு பணி இடம் நீக்கம்: நகராட்சி பணியாளர்கள் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: