சென்னை மெட்ரோ ரயிலில் மே மாதம் 72.68 லட்சம் பேர் பயணம்

சென்னை: கடந்த மே மாதம்72.68 லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 575 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும் மற்றும் மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான ஒரு மாதத்திற்கான பயணிகள் எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதத்தில் க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 26,76,546 பயணிகள், பயண அட்டைகளை பயன்படுத்தி 42,18,357 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 3,61,748 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 6,218 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 5,138 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

The post சென்னை மெட்ரோ ரயிலில் மே மாதம் 72.68 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: