இன்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் நியமனம்: தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழாசிரியர்களை அமர்த்த தமிழக அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட சமூக வலைத்தளபதிவு:
தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளின் முதல் இரு பருவங்களில் தமிழ்மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கற்பிக்க அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியை கொண்டுள்ள தமிழாசிரியர்களை அமர்த்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஆணையிட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

நடப்புக் கல்வியாண்டில் முதலாம் ஆண்டின் முதல் இரு பருவங்களுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள தமிழ்மொழிப் பாடத்தை வரும் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது பருவங்களுக்கும் கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post இன்ஜினியரிங் கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் நியமனம்: தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: