உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்: அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை

சென்னை: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் வெற்றிலைக்காரன் பள்ளம் கிடங்கில் 22,273 மெட்ரிக் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. அதில் 7,174 மெட்ரிக் டன் அரவைக்கு அனுப்பியது போக 15,099 மெட்ரிக்டன் இருந்த நிலையில் 7,000 டன் இருப்பில் இல்லை என்று கேள்விக்குறியுடன் செய்திகள் வெளியானது. மாவட்ட ஆட்சித் தலைவரும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக விழிப்புப்பணிக் குழுவினரும் ஆய்வு செய்து அது போன்று ஏதுமில்லை என்று நேற்று முன்தினம் செய்தியாளர்களை அழைத்துக் கூறினர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த விளக்கம் நேற்று செய்தித்தாள்களில் விரிவாக வந்த பின்னும் சிலர் தேவையில்லாமல் அது பற்றி உண்மைக்குப் புறம்பாக செய்தி பரப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் 1,596 மெட்ரிக் டன் நெல்லும் நேற்று 1789 மெட்ரிக் டன் நெல்லும் அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டுத் தொடர்ந்து தலைமை அலுவலகக் குழுவினர் ஆய்வு செய்ததில் அந்தக் கிடங்கிலிருந்த நெல் அட்டிகளில் மாறுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் தேவையற்ற உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது முதல்வர் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று கூறியுள்ளார்.

The post உண்மைக்கு மாறானவற்றை வெளியிட வேண்டாம் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை பாயும்: அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: