ஜிஎஸ்டி மே மாத வசூல் ₹1.57 லட்சம் கோடி: 12 சதவீதம் அதிகம்

புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டு மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,57,090 கோடி வசூல் ஆகியுள்ளது. இதில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.28,411 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.35,828 கோடி, கூட்டு ஜிஎஸ்டி ரூ. 81,363 கோடி. இதில் ரூ.41,772 கோடி பொருட்களின் இறக்குமதி வரியும் ரூ.11,489 கோடி செஸ் வரியும் அடங்கும். கூட்டு ஜிஎஸ்டியில் இருந்து ஒன்றிய ஜிஎஸ்டிக்கு ரூ. 35,369 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.29,769 கோடியும் அரசு விடுவித்துள்ளது. 2023 மே மாதத்தில் ஒன்றிய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் ஒன்றிய ஜிஎஸ்டிக்கு ரூ.63,780 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.65,597 கோடியும் ஆகும்.

2023 மே மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் வருவாயை விட 12% அதிகமாகும். மே மாதம் சரக்குகளின் இறக்குமதி வருவாய் 12% அதிகமாக இருந்துள்ளது. சேவைகளின் இறக்குமதி உட்பட உள்நாட்டு பரிவர்த்தனைகள் வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த வருவாயைவிட 11% அதிகமாகும். மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 14 மாதங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஜிஎஸ்டி மே மாத வசூல் ₹1.57 லட்சம் கோடி: 12 சதவீதம் அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: