தேசிய கல்விக்கொள்கைப்படி மேற்குவங்கத்தில் 4 ஆண்டு பட்டப்படிப்பு அறிமுகம்: முதல்வர் மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கல்லூரிகளில் 4 ஆண்டு ஹானர்ஸ் பட்டப்படிப்பு இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். கடந்த 2020ம் ஆண்டு வெளியான தேசிய கல்வி கொள்கையின்படி, கல்லூரிகளில் 4 ஆண்டு ஹானர்ஸ் பட்டப்படிப்பு கொண்டுவரப்படும் என்றும் ஹானர்ஸ் பட்டமேற்படிப்பு இரண்டாண்டுக்கு பதில் ஓராண்டு படிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தேசிய கல்வி கொள்கையை மேற்கு வங்க அரசு ஏற்று கொண்டுள்ளது.

அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4 + 1 ஹானர்ஸ் படிப்பு இந்த கல்வியாண்டு முதலே அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‘‘முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பேசுகையில், ‘‘யுஜிசி பரிந்துரைத்துள்ள கல்வி கொள்கை மாணவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும் என்பதால் அரசு இதை ஏற்று கொண்டுள்ளது. முன்பு பட்டப்படிப்பு முடிக்க 3 ஆண்டுகள் ஆகும். தற்போது சாதாரண பட்டப்படிப்புகளுக்கு 3 ஆண்டுகளும், ஹானர்ஸ் படிப்புக்கு 4 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post தேசிய கல்விக்கொள்கைப்படி மேற்குவங்கத்தில் 4 ஆண்டு பட்டப்படிப்பு அறிமுகம்: முதல்வர் மம்தா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: