சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்துவதற்கு நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் பொருத்தம்..!!

சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தரைத்தள ஊழியர்கள் உதவி இல்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பதற்காக தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. சென்னை விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமான நிறுத்தும் மேடைகள் உள்ளது. தற்போது அதில் 95 மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. விமானங்கள் ஓடு பாதையில் இருந்து இணைப்பு சாலைக்கு வந்து பின்னர் நிற்க வேண்டியத்தில் வந்து நிற்கும்.

அப்போது தரைத்தள ஊழியர்கள் சிக்னல் கொடுத்து விமானங்கள் சரியான இடத்தில் நிற்க விமானிக்கு உதவி செய்வார். ஆனால், கடுமையான வானிலையில் போது விமானிகளால் தரைத்தள ஊழியர்களின் சிக்னல்களை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போவதால் விமானத்தை நிறுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போல நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 50 கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இன்று காலை முதல் அந்த கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தன. டாக்சி பாதையில் இருந்து நிறுத்தும் மேடைக்கு வரும் வரை 60 மீட்டர் தூரத்தில் இருந்து இந்த கருவிகள் வழிகாட்டும். விமான நேர்கோட்டில் இருந்து விலகி சென்றால் தரையில் உள்ள டிஜிட்டல் விளக்குகள் மூலம் வழிகாட்டு சரியான இடத்தில் நிற்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்துவதற்கு நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் பொருத்தம்..!! appeared first on Dinakaran.

Related Stories: