மதிமுகவில் 5வது அமைப்பு தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வானார் வைகோ!

சென்னை: மதிமுகவில் 5வது அமைப்பு தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ மட்டுமே மனுத்தாக்கல் செய்ததால் போட்டியின்றி தேர்வானார். மதிமுக உட்கட்சி தேர்தல் வருகிற ஜூன் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் கட்சி தலைவர் பொதுச்செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டி நடைபெற உள்ளது, மதிமுகவை சேர்ந்த பலரும் போட்டியிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதே சமயம் அவை தலைவர் பதவிக்கு அர்ஜுனராஜ் ,பொருளாளர் பதவிக்கு செந்தில் அதிபன், முதன்மை செயலாளர் பதவிக்கு துரை வைகோ, துணை பொது செயலாளர் பதவிக்கு மல்லை சத்யா, ஆடுதுறை மணி, ராஜேந்திரன், உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு வைகோ தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்வானார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மதிமுக பொதுச்செயலாளராக வைகோ போட்டியின்றி தேர்வானார். பொதுச்செயலாளர் பதவிக்கு வைகோ மட்டுமே மனுத்தாக்கல் செய்தநிலையில், போட்டியின்றி தேர்வானார். முதன்மைச்செயலாளர் பதவிக்கு துரை வைகோவும் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 3ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதிமுகவில் 5வது அமைப்பு தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வானார் வைகோ! appeared first on Dinakaran.

Related Stories: