(தி.மலை)அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம்

சேத்துப்பட்டு, ஜூன் 1: போளூர் தொகுதி பெரணமல்லூர், சேத்துப்பட்டு யூனியனின் உள்ள நெடுங்குணம், முடையூர், மண்டகொளத்தூர் ஆகிய கிராமங்களில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதர், ராகவன், வீரபத்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் போளூர் தொகுதி எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொண்டு அதிமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார், ஒன்றிய அவைத்தலைவர் நாராயணசாமி உள்பட மாவட்ட ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post (தி.மலை)அதிமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: