5 நாள் பயணமாக ஊட்டிக்கு ஆளுநர் 3ம் தேதி வருகை

ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகிற 3ம் தேதி ஊட்டிக்கு வருகிறார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். 9ம் தேதி வரை ஊட்டியில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற 5, 6 மற்றும் 7 ஆகிய 3 நாட்கள் ஊட்டி ராஜ்பவனில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதுதவிர வேறு சில நிகழ்ச்சிகளில் ஆளுநர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

The post 5 நாள் பயணமாக ஊட்டிக்கு ஆளுநர் 3ம் தேதி வருகை appeared first on Dinakaran.

Related Stories: