42 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம் அணையை திறக்க அனுமதி கொடுத்தவரும் சஸ்பெண்ட்

ராய்ப்பூர்: அணையில் விழுந்த செல்போனை எடுக்க 42 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்ற அனுமதி ெகாடுத்த அதிகாாி சஸ்ெபண்ட் செய்யப்பட்டுள்ளார். சட்டீஸ்கர் கான்கெர் மாவட்டத்தில், கொய்லிபெடா வட்டார உணவு ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ் வாஸ். இவர் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்ற போது தனது ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவறவிட்டுள்ளார். செல்ேபானை எடுக்க 42 லட்சம் லிட்டர் நீரை அவர் வெளியேற்றி இருந்தார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ரூ.53 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்ணீரை வெளியேற்ற அனுமதி கொடுத்த நீர்வளத்துறை அதிகாரி திவாருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை நீர்வளத்துறை சிறப்பு செயலாளர் அனுராக் பாண்டே பிறப்பித்துள்ளார்.

The post 42 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றம் அணையை திறக்க அனுமதி கொடுத்தவரும் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: