இன்ஜினியரிங் பதிவுக்கு 4 நாளே உள்ளது

சென்னை: இன்ஜினியரிங் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24ம் கல்வியாண்டில் இன்ஜினியரிங் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு கலந்தாய்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் (மே) 5ம் தேதி தொடங்கியது. அந்த வகையில் நேற்று மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி, இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 417 விண்ணப்பப்பதிவு முடிந்துள்ளது. அதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 943 பேர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தியும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 179 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் இருக்கின்றனர். இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை பதிவு செய்வது வருகிற 4ம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெற உள்ளது.

The post இன்ஜினியரிங் பதிவுக்கு 4 நாளே உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: