வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்: சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை 4 திசைகளிலும், மலைகளால் சூழப்பட்ட மிகவும் பிரபலமான இடம் சதுரகிரி. இங்கு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 64 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அதேசமயம் மழை நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்நிலையில் ஜூன் மாதம் பிரதோஷம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமி முன்னிட்டு நாளை முதல் நான்கு நாட்களுக்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோட பகுதிகளில் இறங்கி குளிக்க கூடாது என்றும் இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீப்பற்ற கூடிய பொருட்களை மலைப்பகுதிக்கு கொண்டுவரக் கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: