இந்தியர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள்: ராகுல் காந்தி பேச்சு

டெல்லி: இந்தியர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார் . அமெரிக்காவில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றுள்ள ராகுலை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும் சாம் பிட்ரோடா வரவேற்றார். இந்நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழக விழாவில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய ஒற்றுமையை தடுக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவையெல்லாம் என்னை முன்னோக்கி செல்லவே வைத்தது.

ஒருவேளை உங்களுக்கு கோபம், வெறுப்பு, கர்வம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை இருந்திருந்தால் நீங்கள் பாஜக கூட்டத்தில் இருந்திருப்பீர்கள். இன்று இந்தியாவில் ஏழைகளும் சிறுபான்மையினரும் உதவியற்று நிற்கின்றனர். இந்தியர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள் . ஊடகங்கள் மற்றும் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சிறிய கூட்டம் தான் வெறுப்பை பரப்பி விடுகிறது. நீங்கள் எப்படி தாக்கப்படுவதாக உணர்கிறீர்களோ அப்படித்தான் சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், பழங்குடியினரும் உணர்கிறார்கள். 1980களில் தலித்துகளுக்கு என்ன நடந்ததோ அதுவே இன்று இந்தியாவில் முஸ்லிம்களுக்கு நடக்கிறது. எனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல நாம் இருக்கக் கூடாது என்று பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் சிலர் அப்படி உள்ளனர்.

தங்களுக்கு எல்லாமும் தெரியும் என்று நம்புபவர்கள் இந்தியாவை ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் விஞ்ஞானிகளுக்கே விஞ்ஞானம் சொல்லிக் கொடுப்பார்கள். ராணுவத்திற்கு போர் செய்ய சொல்லிக் கொடுப்பார்கள். வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்று பாடம் எடுப்பார்கள். ஆனால் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர்தான். கடவுள் வந்து பிரதமர் பக்கத்தில் உட்கார்ந்தால் பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது என கடவுளிடம் விளக்க தொடங்கி விடுவார் பிரதமர். நாம் என்ன உருவாக்கி வைத்துள்ளோம் என கடவுளே யோசிப்பார் என்றார்.

The post இந்தியர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் வெறுப்பதை விரும்ப மாட்டார்கள்: ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: