டெல்லியில் கனமழை எதிரொலியால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

டெல்லி: டெல்லியில் கனமழை எதிரொலியால் இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடைமழை காரணமாக வழக்கமாக பதிவாகும் வெப்பநிலையை விட 6 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது.

கோடை காலத்தின் உச்சமாக டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லியில் உள்ள பிரதான சாலைகள் மழைநீர் தேங்கியது. சாலைகளை மழைநீர் ஆக்கிரமித்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மேலும் டெல்லி, காஜியாபாத், நொய்டா, ஃபரீதாபாத், யமுனா நகர், குருசேத்திரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ஒருசில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் கனமழை எதிரொலியால் இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடைமழை காரணமாக வழக்கமாக பதிவாகும் வெப்பநிலையை விட 6 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் 70-80 சதவீதத்துக்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் இருந்துள்ளது. வெப்ப அலைகள் குறைந்து வருவதால், இனி படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

The post டெல்லியில் கனமழை எதிரொலியால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: