எலக்ட்ரிக் படகை உருவாக்கியது பிஎம்டபிள்யூ..!!

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, புதிய முயற்சியாக, எலக்ட்ரிக் படகை உருவாக்கியுள்ளது. கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படகு, நீரில் இயங்குவதற்காக தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் வாகனம் இது என கூறப்படுகிறது. படகின் நீளம் 13.15 மீட்டர். அதிகபட்சமாக மணிக்கு 30 கடல் மைல் அல்லது 56 கி.மீ வேகம் செல்லும் என கூறப்படுகிறது.

இதில் 100 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார், மொத்தம் 240 கிலோவாட் அவர் வெளிப்படுத்தக் கூடிய 6 பிஎம்ஐ-ஐ3 பேட்டரிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர, டால்பி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம், 32 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

The post எலக்ட்ரிக் படகை உருவாக்கியது பிஎம்டபிள்யூ..!! appeared first on Dinakaran.

Related Stories: