ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி கொண்டாட்டம்

சென்னை: நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்றதை கொண்டாடும் வகையில், ஆழ்கடல் பயிற்சி நிறுவன இயக்குநர் நீலாங்கரையில் 60 அடி ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். புதுச்சேரி மற்றும் சென்னையில் டெம்பிள் அட்வென்ச்சர் என்ற ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அரவிந்த். இவர், புத்தாண்டு, குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் பல்வேறு நிகழ்வுகளை ஆழ்கடல் பகுதியில் கொண்டாடி, அதனை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் 2023 ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணி வென்றதை வரவேற்கும் வகையில், ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்த், தனது நண்பர்களுடன் நீலாங்கரை ஆழ்கடல் பகுதியில் 60 அடி ஆழத்தில் சி.எஸ்.கே அணி உடை அணிந்து கிரிக்கெட் விளையாடி கொண்டாடினார். இதனை அவர் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

The post ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: